வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாதவர்கள் இரண்டே பேர். ஒருவர் இன்னும் பிறக்காதவர், மற்றொருவர் இறந்தவர் என்பார்கள். அது மிகவும் சரி என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு சிலருக்கு பிரச்சினைகள் அதிகம் இருக்கின்றன. ஒரு சிலருக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான பிரச்சினைகள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் பிரச்சினைகள் பூதாகரமாக தெரிவதேன்? மேலே படியுங்கள்....


நிறைய பேர் தாங்கள் யாருமே அனுபவிக்காத கஷ்டங்களையெல்லாம் அனுபவித்ததாக சொல்லுவார்கள். அதில் ஒரு சிலரே உண்மையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களாக இருப்பார்கள். மற்றவரெல்லாம் சிறிய துன்பங்களை பூதக் கண்ணாடி வைத்து பார்ப்பவர்கள் என்பது தான் நிஜம். அவர்கள் நீட்டி முழக்கித் தான் பட்ட சிறிய கஷ்டங்களைகே கூட பெரிதாக்கி  எல்லோரிடமும் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் தான் பட்ட பெரிய கஷ்டங்களைக் கூட அதிகம் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். 

ஏன் பலருக்கு சிறிய பிரச்சினைகள் கூட பூதாகரமாகத் தோன்றுகிறது? எல்லாவற்றிற்கும் அவர்கள் மனது தான் காரணம் ஆகும். மன வலிமையற்றவர்கள் எல்லோரும் சிறிய துன்பங்களைக் கூட தாங்க மாட்டார்கள். அவற்றைப் பெரிது படுத்தி எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மன வலிமைப் பெற்றவர்கள் பெரிய துன்பங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்குக் கான்சர் வந்தாலும் இருக்கப் போகும் சில நாட்களை இன்பமாக கழிப்பார்கள்.

ஆனால் மன வலிமை அற்றவர்கள் தினம் தினம் செத்துப் பிழைப்பார்கள். சாதரண  காய்ச்சலுக்கே ஊரைக் கூட்டி விடுவார்கள். இன்பமாக வாழ வேண்டிய வாழ்க்கையைத்  துன்பமாக கழிப்பார்கள்.

உங்கள் பிரச்சினைகள் பூதாகரமாக தெரிவதேன்? உங்கள் மனம் பலவீனமாக இருப்பதால் தான். மனதை எப்படி வலிமைப் படுத்துவது? தினமும் தியானம் செய்யுங்கள். நாளடைவில் உங்கள் மனம் பலம் பெரும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்!

உங்கள் விதியின் 5 விதிகள் 

உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள 20 வழிகள் 

Post a Comment

 
Top