உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகும். சிலர் இயல்பாகவே தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  சில பணக்காரர்களின் குழந்தைகளும் புகழ் பெற்றவர்களின் குழந்தைகளும் தன்னம்பிக்கை பெற்றுத் திகழ்கிறார்கள். சிலர் சில வெற்றிகளைப் பெறும்போது தன்னம்பிக்கை பெறுகின்றனர். உங்கள் தன்னம்பிக்கையை பெருக்கிக் கொள்வது எப்படி? மேலே படியுங்கள்.....




1. எல்லோருக்கும் சில திறமைகள் நிச்சயம் இருக்கும். அவற்றை எண்ணிப் பாருங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். 

2. அந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 

3. ஒரு துறையில் நீங்கள் சிறந்த நிபுணத்துவம் பெற்றால் உங்களுக்குத் தன்னம்பிக்கை தானாகவே வரும்.

4. எப்பொழுதுமே உற்சாகத்துடன் இருங்கள்.

5. சிரித்த முகத்துடன்  இருங்கள்.

6. உங்களை நன்றாக அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

7. நல்ல அழகான உடைகளை அணியுங்கள்.

8. பேசும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

9. அடையக் கூடிய இலட்சியங்களை மேற்கொள்ளுங்கள். அவற்றை அடையும் போது தன்னம்பிக்கைத் தானாகவே பிறக்கும்.

10. கடுமையாக உழையுங்கள். உழைப்பவர்களை இந்த உலகம் மரியாதையோடு பார்க்கும். உங்கள் தன்னம்பிக்கையும் அதனால் அதிகரிக்கும்.

11. உங்கள் குறை நிறைகளை ஆராய்ந்து கண்டு பிடியுங்கள். 

12. உங்களுக்குத் தேவையான விஷயங்களில் நீங்கள் பலவீனமாக இருந்தால், எப்பாடுபட்டாவது அவற்றில் பலம் பெற்று விடுங்கள்.

13. உங்களுக்குத் தேவையான விஷயங்களை எப்பாடுபட்டாவது கற்றுக் கொள்ளுங்கள்.

14. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

15. ஒரு காரியத்தில் இறங்கும் போது அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை வெற்றிக்குத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

16. எதிர்மறை எண்ணங்களை விட்டொழியுங்கள்.

17. நேர்மறை   எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

18. துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

19. எல்லோருடனும் அன்பாக பழகுங்கள்.

20. பிறருக்கு உதவுங்கள்.


வாழ்க  வளமுடன்!

அனாவசியமான செலவுகளைத் தவிர்ப்பது எப்படி?

உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பது எது?




Post a Comment

 
Top