விதி என்று ஒன்று இருக்கிறதா என்பது இந்த உலகம் உள்ளவரை மக்கள் விவாதம் பண்ணக் கூடிய விஷயங்களில் ஒன்று என்பது நிஜம். விதி என்றால் என்ன?  நீங்கள் நம்ப முடியாத நல்ல அல்லது கெட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பது விதியின் பலன் தான் என்று பலர் நம்புகிறார்கள்.  உங்கள் விதி எப்படி உருவாகிறது? எதனால் நீங்கள் இந்த விதிப் பயனை இப்பிறவியில் அனுபவிக்கிறீர்கள்? உங்கள் விதியின் விதிகள் தான் யாவை? மேலே படியுங்கள்....



இன்று உங்களுக்கு நடக்கும் எல்லா பலன்களுக்கும் காரணங்கள் இருக்கும் அல்லவா? அந்த காரணங்களைத் தான் நாம் விதி என்கிறோம். ஐந்து விதமான விதியின் விதிகள் இன்று உங்களுக்கு நடக்கும் நல்ல அல்லது கெட்ட பலன்களுக்கு காரணங்களாக இருக்கின்றன.

1. நீங்கள் போன பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்கள்  இன்று உங்களுக்கு நடக்கும் பலன்களுக்கு காரணமாகின்றது.

2. பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம், என்கின்ற ஐந்து விஷயங்களுடன் நாம் ஒத்து வாழ்ந்தால் நல்லது நடக்கும். இல்லை என்றால் கெடு பலன்களே நடக்கும். அதற்கு தான் நாம் வாழும் வீடு வாஸ்து விதிகளின் படி கட்டியிருக்க வேண்டும் என்கிறோம். மேலும் இயற்கை உணவுகள் உண்டு, தியானம் முதலியவைகளை கடைப் பிடித்து வந்தால் பஞ்ச பூதங்களின் அருள் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

3. நாம் பிறந்தபோது இருந்த கிரகங்களின் அமைப்பு படி நமக்கு நல்லது   அல்லது  கெட்ட விஷயங்கள் நடக்கின்றன. உங்கள் பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் எதைத் தொட்டாலும்  பொன் தான்.

4. இப்பொழுது கிரகங்கள் இருக்கும் அமைப்பைப் பொருத்தும் நமக்கு நல்ல அல்லது கெட்ட  பலன்கள் நடக்கும். அதைத் தான் கோட்சார பலன்கள் என்கிறார்கள்.

5. இன்று நீங்கள் எடுக்கும்  முயற்சிகள், நீங்கள் எடுக்கும் முடிவுகள், போடும் உழைப்பு இவை எல்லாமும் நமக்கு நடக்கும் பலன்களுக்கு முக்கிய  காரணமாகின்றன என்றால் மிகையாகாது.

ஆக, இந்த 5 விதியின் விதிகள் தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்றே தோன்றுகிறது. இதில் இரண்டு விஷயங்கள் தான் நம் கையில் இருக்கின்றன. அதாவது நம் முயற்சி மற்றும் வாஸ்து விதிப் படி கட்டப் பட்ட வீட்டில் வசிப்பது மற்றும் நல்ல வாஸ்து இருக்கும் இடத்தில் பணி  புரிவது ஆகும்.

மற்றவை எல்லாம் நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகத் தான் விளங்குகின்றன. கூட்டி கழித்துப் பார்த்தால் நமது பெரிய வெற்றிக்கு நமது முயற்சி மட்டும் போதாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் நாம் கடுமையாக உழைத்தால் நிச்சயம் அதற்கு உண்டான நற் பலன்களை நாம்  அனுபவிக்கலாம் என்றே சொல்ல  வேண்டும்.

மற்ற விதிகள் உங்களுக்கு சாதகமாக இல்லாதது போல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும்?  இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய அந்த இறைவனை சரண் அடைந்தால்  நிச்சயம் நல்ல பலன்கள் நடக்கும். தினமும் தியானம் செய்து வந்தால், தியானத்தில் நமது ஊழ் வினைகள் கழிந்து வருவதாக கற்பனை செய்து வந்தால் நாளடைவில் கெடு பலன்ஙகள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும் என்பது உறுதி. மேலும் கிரகங்களுக்குப்  ப்ரீத்தி செய்வதன் மூலமாகவும் நல்ல பலன்களை அடையலாம்.

வாழ்க வளமுடன்! 

நீங்கள் கடை பிடிக்க வேண்டிய முக்கிய வாஸ்து விதிகள் 

உங்கள் விதி எண்ணைக்  கண்டு பிடிப்பது எப்படி?

Post a Comment

 
Top