அகங்காரம் (Ego) பேரழிவைக் கொடுக்கும் அசுர சக்தி வாய்ந்தது ஆகும். அகங்காரம், கிடைக்க வேண்டிய வேலையை கிடைக்க விடாமல் செய்யும். நண்பர்களை இழக்க வைக்கும். பலவிதமான நஷ்டங்களைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, கணவன் மனைவிக்குள் உள்ள அற்புத உறவையும் கூட அறவே அழிக்கும் அரக்கன் தான் இந்த அகங்காரம்.


கணவன் தன்  மனைவி தனது நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனைவியோ, கணவன் தனது  சந்தோஷத்திற்காகவும், பாதுகாப்புக்கிற்காகவும்  படைக்கப் பட்டவன் என்று உறுதியாக நம்புகிறாள். அதீதமான எதிர்பார்ப்புகள் பெரிய ஏமாற்றங்களில் முடிகின்றன. கணவன் மனைவி மாற வேண்டும் என்று விரும்புகிறான். மனைவியோ கணவனை மாற்ற பெரிதும் முயற்சிக்கிறாள். ஆனால் இருவரும் தங்கள் ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் விட்டுக் கொடுக்கும் பண்பை இழந்து விடுகிறார்கள். முடிவு? சில சமயங்களில் மண  முரிவு நிகழ்கிறது. பல சமயங்களில் மன முறிவு ஏற்பட்டு, மனங்கள் விரிசலிட்டாலும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கின்றனர்.

சில தம்பதிகள் சமூகத்திற்காக சேர்ந்தே வாழ்கின்றனர்.  சிலர் தாங்கள் பெற்று விட்ட குழந்தைகளின் நலன் கருதி சேர்ந்து வாழ்கின்றனர். கணவன் மனைவிக்குள் ஏன் இந்த அகங்காரம், ஆணவம் எல்லாம்? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் எத்தனை இன்பங்களை அளித்திருப்பார்கள்? எத்தனை தியாகங்களைப்  புரிந்திருப்பார்கள்? கேவலம் அகங்காரத்தினால் எதற்கு புனித திருமண உறவைக்  கெடுக்க வேண்டும்?

கணவன், மனைவி  செய்த நன்மைகளையும், தியாகங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மனைவியின் சிறு சிறு குறைகளைப் பெரிது படுத்தாமல் மன்னித்து மறக்க வேண்டும். அதே போல் தான் மனைவியும் கணவன் செய்த நன்மைகளையும், தியாகங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருவர் மற்றவரது குறைகளை நிறைகளாக பார்க்க பழக வேண்டும்.தம்பதியரிடையே அகங்காரம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

திருமண உறவை இடியோடு அழித்திடும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் அடியோடு அழிப்போம். வாழ்க வளமுடன்!

கடைசி வரை அன்யோன்யமாய் வாழும் தம்பதிகள் 

                   மற்றவர்களை மாற்ற நினைப்பது சரியா?

Post a Comment

 
Top