வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை (positive thinking) எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத்  தெரிந்திருக்கும். நல்லதே நடக்கும் என்று நினைப்பது சரியான விஷயம் தான். ஆனால் அதே சமயம் சில நேரங்களில் எதிர்மறையாகவும் (negative thinking) சிந்திப்பது அவசியமாகிறது.


நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புகிறீர்கள். அதற்கான முயற்சிகளையும் எடுத்து விட்டீர்கள். விரும்பிய வேலை கிடைக்கும் தான். இருந்தாலும் மனதின்  ஒரு ஓரத்தில் 'கிடைக்காவிட்டால்' என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். கிடைக்கா  விட்டால் அதை எளிதில் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு மாற்று ஏற்பாட்டினையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நமக்கு ஏமாற்றமும், கவலையும் வராது.

எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். எதிர்மறையாகவும் சற்று சிந்திக்கத் தான்  வேண்டும்.

காதலில் ஈடுபடும் போது தோல்வியையும் எதிர்பாருங்கள். வியாபாரத்தில் இறங்கும் போது நஷ்டத்தையும் எதிர் பாருங்கள். மோசமான விளைவுகளையும் யோசியுங்கள். எதிர்பாருங்கள் எதற்கும் தயாராக இருக்கும் போது ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும். கவலைகளின் வீரியம் குறையும்.

வாழ்க்கையில் சில சமயங்களில் எதிர்மறையாக சிந்திப்பதில் தப்பில்லை. சொல்லப் போனால் அது தேவையும் கூட. எதிர்பாராததை எதிர் பாருங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும்.

வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top