Google+ Followers

 

அந்த காலத்தில் வீட்டுக்கு ஒருவர் படையில் இருப்பார்கள். இன்று வீட்டுக்கு ஒருவர் வெளி நாட்டில் இருக்கின்றார்கள்(உபயம் IT Companies). வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிப்பது என்பது இன்று அத்தியாவசியமான விஷயமாகி விட்டது. வெளி நாடு செல்லும்  யோகம் யாருக்கெல்லாம் அமையும்?-ஜோதிடரீதியாக? வெளி நாடு செல்லும்  யோகம் ஜாதகப்படி உங்களுக்கு உள்ளதா?  மேலே படியுங்கள்.....



ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் இவை மூன்றும் ஜல ராசிகள். இவற்றை லக்னமாகவோ, ராசியாகவோ கொண்டவர்கள் வெளி நாடு செல்ல வாய்ப்புண்டு. 

லக்கினாதிபதி 9 ஆம் வீட்டிலோ, குரு அல்லது சந்திரன் 12 ஆம் வீட்டிலோ இருந்தாலும் யோகம் உண்டு. குரு வக்கிரமானாலும் யோகம் உண்டு.

லக்கினம், 9 ஆம் வீடு, 12 ஆம் வீட்டு அதிபதிகள் சர ராசியில் இருந்தாலும் வெளி நாடு செல்லலாம்.

9 ஆம் வீட்டிலோ, 12 ஆம் வீட்டிலோ, ஜல ராசிகளில் நிற்கும் கிரககங்களின் திசா, புத்திகளிலோ  வெளி நாடு செல்லும் யோகம் ஏற்படும். 

9 ஆம் அதிபதி 12 ஆம் வீட்டிலும் 12 ஆம் அதிபதி 9ஆம் வீட்டிலும் இருந்தாலும் யோகம் உண்டு. ஒரு சிலர் கேது திசையில் வெளி நாடு செல்வர்.


                     15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 


                              முக்கிய 15 வாஸ்து விதிகள் 
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top