குரு பெயர்ச்சி பலன்கள் 2016- தனுசு,மகரம் 



தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 10வீட்டில் சஞ்சரிக்கின்றார். மேலும், அவர் 2ஆம், 4ஆம் மற்றும் 6ஆம் வீடுகளைப் பார்வை செய்கின்றார். தொழில் உத்தியோகம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறு, சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இறுதியில், தொழிலில் வெற்றியைக் காண்பீர்கள். நிலம், வீடு வாங்கும் யோகம் உள்ளது. புதிய வாஹனங்களும்  வாங்குவீர்கள். தாயார் உறவு சிறக்கும். மாணவர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் சந்தோசம் தவழும். எதிரிகள் பலமிழப்பார்கள். உங்கள் கை ஓங்கும். கோர்ட் வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி உங்களுக்கே. கடன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பண வரவு திருப்திகரமாக உள்ளது. மேலும் நன்மைகள் கிடைக்க, தஷிணாமூர்த்தியை வியாழக் கிழமை தோறும் வழிபடுங்கள்.




மகரம்: மகர  ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். மேலும், அவர் ராசி, 3ஆம் மற்றும் 5ஆம் வீடுகளை பார்வை செய்கின்றார். எடுத்த காரியங்களில் வெற்றி, தாராளமான பண வரவு உண்டு. பூர்வீக சொத்துக்களினால் நன்மை ஏற்படும். தந்தை உறவு சிறக்கும். தந்தையினால் லாபம் உண்டு. ஆலய தரிசனங்களுக்குப்  பஞ்சம் இருக்காது. ஆரோக்கியம் பிரமாதமாக இருக்கும். தைரியமாக செயல்படுவீர்கள். சகோதர சகோதரிகளினால் நன்மை உண்டு. பிள்ளைகள் முன்னேற்றம் காண்பார்கள். அவர்களினால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்டமான காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.    


குரு பெயர்ச்சி பலன்கள் 2016 -மேஷம், ரிஷபம் 


குரு பெயர்ச்சி பலன்கள் 2016 -மிதுனம், கடகம் 


குரு பெயர்ச்சி பலன்கள் 2016 -சிம்மம், கன்னி 



குரு பெயர்ச்சி பலன்கள் 2016 -துலாம், விருச்சிகம் 



Post a Comment

 
Top