2016 குரு பெயர்ச்சி பலன்கள்- மிதுனம், கடகம்

மிதுனம்: மிதுன ராசிக்கு, குரு 4 ஆம் வீட்டுக்கு செல்கின்றார். ராசிக்கு, 8ஆம், 10ஆம், மற்றும் 12ஆம் வீடுகளை பார்க்கின்றார். இந்த வருடம் தொழிலில் இடமாற்றம் அல்லது வசிக்கும் வீடு மாற்றும் நிலை உருவாகும்.  வீடு வாகனங்கள் செலவு வைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சுப செலவுகள் பண இருப்பைக் குறைக்கும். 75% நன்மைகள் எதிர்பார்க்கலாம்.




கடகம்: மிதுன ராசிக்கு, குரு 3 ஆம் வீட்டுக்கு செல்கின்றார். ராசிக்கு, 7ஆம், 9ஆம், மற்றும் 11ஆம் வீடுகளை பார்க்கின்றார். இந்த வருடம் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மன உளைச்சல் இருக்கு காலம் இது. இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் நிச்சயம் இந்த வருடம் தகுந்த துணையை கைப்பிடிப்பார்கள். தந்தையுடன் உறவு பலப்படும். பூர்வீக சொத்துக்களினால் நன்மை உண்டு. ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம் உண்டு. 2017இல் தடைகள் நீங்கி மேலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தக்ஷிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் நல்லது. நல்ல முன்னேற்றம் ஏற்படும். 70% நன்மைகள் எதிர்பார்க்கலாம். 

2016 குரு பெயர்ச்சி பலன்கள்- மேஷம், ரிஷபம் 

குரு பெயர்ச்சி பலன்கள் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுவது ஏன்? 

Post a Comment

 
Top