(2016 குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும்) 


மேஷம்: மேஷ ராசிக்கு குரு 6ஆம் இடத்திற்கு செல்கின்றார். ராசிக்கு, 10ஆம், 12ஆம் மற்றும் 2ஆம் வீடுகளை பார்க்கின்றார். தொழில் மற்றும் உத்தியோகம் சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டு. எதிரிகள் இருந்தால் அடக்கி வாசியுங்கள். சண்டை போட இது உகந்த நேரம் அல்ல. சிறு சிறு பிணிகள் வந்து குணமாகும். வழக்குகள் இருந்தால் தள்ளி போடுதல் நலம் பயக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது. பண புழக்கம் திருப்திகரமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். மேலும், செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். தக்ஷிணாமூர்த்தி வழிபாடு வியாழக் கிழமை பண்ணுதல் விஷேசம். 70% நன்மைகள் எதிர்பார்க்கலாம். 


ரிஷபம்: ராசிக்கு குரு 5ஆம் இடத்திற்கு செல்கின்றார். ராசிக்கு, 9ஆம், 11ஆம் வீடு மற்றும் ராசியைப் பார்க்கின்றார். குழந்தைகள் இருந்தால் அவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குழந்தை வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல செய்தி நிச்சயம் உண்டு. குழந்தைகளினால் நன்மைகளும், மகிழ்ச்சியும் ஏற்படும். பூர்விக சொத்துக்களினால் பண வரவு எதிர்பார்க்கலாம். கோவில் குளங்கள் செல்லும் யோகம் ஏற்படும். செய்யும் தொழிலில் நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்கள் வராமலிருந்த பணம் இப்பொழுது வரும். தொட்டதெல்லாம் பொன் ஆகும் அற்புதமான நேரம் இது. நன்றாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். பண வரவு சிறப்பாக வருடம் முழுவதும் உள்ளது. 95% நன்மைகள் நடைபெறும் காலம். 

                                                                                         (தொடரும்)

குரு பெயர்ச்சி பலன்கள் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுபடுவது ஏன்?

2016 குரு பெயர்ச்சி பலன்கள் 

Post a Comment

 
Top