ஆசைகள் இல்லாத மனிதன் யார் இருக்கிறார்கள் இந்த உலகில்? ஆசைகள் தான் இந்த உலகையும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. சில ஆசைகளை நாம் எளிதில் அடைந்து விடலாம்.  ஆனால் சில ஆசைகள் தீய விளைவுகளை  ஏற்படுத்த முடியும் என்பதால்  உங்களுக்கு பயம் ஏற்படுகிறது. ஆசையை அடைய வேண்டும் என்பது ஒரு புறம். பயம் மற்றொரு புறம். உங்கள் ஆசை பயத்தை மிஞ்சும்  போது? மேலே படியுங்கள்......


நாம் ஆசைப் படுவதை எல்லாம் இவ்வுலகில் அடைந்து விட முடியாது என்பது தான் நிஜம். சில ஆசைகளை ஏதாவது தீய விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தினால் நாம்  கட்டுப் படுத்திக் கொள்ளுகிறோம். ஒரு பெண் ஒருவரை விரும்பலாம். ஆனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளைக் கண்டு அவள் அஞ்சலாம். அதனால் அந்த காதலை அவள் கட்டுப் படுத்திக் கொண்டு வேருவரை திருமணம் செய்யலாம். அதற்கு பதில் அவளின் ஆசை பயத்தை விஞ்சி நின்றால்? அவள் ரிஸ்க் எடுக்கத் துணிகிறாள். ஆசை பயத்தை மிஞ்சி நிற்கிறது இந்த இடத்தில். அவள் அவனை அடைகிறாள். அல்லது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளுகிறாள்.

நம் வாழ்வில் எங்கெல்லாம் நம் ஆசை நம் பயத்தை மிஞ்சி நிற்கிறதோ அங்கெல்லாம் நாம் நம் ஆசையை தயங்காமல் நிறைவேற்றிக் கொள்ளுகிறோம். ஒரு ஆண் ஒரு விலை மாதுவிடம் போக விரும்புகிறான். ஆனால் எய்ட்ஸ் பயம் அவனுக்குள் எழுகிறது. பயம் ஆசையை வென்றால் அவன் ஒழுக்கசீலனாகிறான். ஆசை பயத்தை வென்றால் விலை மாதுவுடன் சல்லாபிப்பான்.

நம் வாழ்க்கை முழுவதும் இந்த பயமும் ஆசையும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆசை வெற்றி பெரும் போது சந்தோசம் அல்லது பிரச்சினையை அனுபவிக்கிறோம். பயம் வெற்றி பெறும் போது ஏமாற்றம் மிஞ்சிகிறது. ஆனால் பிரச்சினை இல்லாமல் வாழ்வோம். இது தான்  வாழ்க்கை.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top