மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்திற்கு பின் என்ன ஆகும்? இந்த கேள்விக்குப்  பதில் தெரியாததால் தான் நாம் மரணிக்கப் பயப்படுகிறோம். மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா? மேலே படியுங்கள்.....



நம் முன்னோர்கள் அதிக ஞானம் பெற்றுக் காணப் பட்டார்கள் என்பது நிஜம். அவர்கள் தாங்கள் ஞான திருஷ்டியால் பல உண்மைகளை உணர்ந்து இவ்வுலகிற்கு சொன்னார்கள். அவர்களின் கண்டறிந்த உண்மை  என்னவென்றால் ஆன்மாவிற்கு அழிவே இல்லை என்பது தான். அதாவது உயிருக்கு மரணம் இல்லை. மரணம் நம் உடலுக்கு மட்டும் தான். சட்டை பழசாகி விட்டால் வேறு சட்டை நாம் மாற்றுவது போல் உயிர் என்னும் ஆன்மா தான் தங்கும் உடல் பழுதடைந்து விட்டால் வேறு உடல் தேடி அதில் புகும் என்பது தான் நம் முன்னோர்கள் கண்டு உணர்ந்து நமக்கு சொன்னது ஆகும்.

நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன.  நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும். நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நம் உடலிலிருந்து உயிர் பிரிந்த பின் அந்த உயிர் ஏ தோ ஒரு குகைப் பாதை வழியாக வேறொரு உலகிற்கு  செல்லுவதாகத்  தோன்றுகிறது. செத்துப் பிளைத்தவர்கள், சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் சொல்லுகிறார்கள். ஏதோ ஒரு பெரிய வெளிச்சத்துடன் ஒரு குகை தெரிந்தது. அங்கு செல்லுவதற்கு முன் நான் உயிர் பிழைத்து விட்டேன் என்று. நாம் இறப்புக்கு பின் செல்லும் இடத்தைத் தான் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்லுகிறார்கள். அங்கு நமது பூத உடல் இருக்காது. ஆனால் சூட்சம உடல் இருக்கும். 

பிறகு சில காலம் கழித்து நாம் மீண்டும் இப்புவுலகிற்கு வந்து மீண்டும் பிறக்கிறோம். இது இரு சுழற்சி. பிறப்பதும், கொஞ்ச காலம் வேறு உலகில் இருப்பதும் மீண்டும் பிறப்பதும்  மீண்டும் மீண்டும் நடந்துக் கொண்டே இருக்கும்.

இதற்கு முடிவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். நம் ஆன்மா பல  ஜென்மங்களில் வளர்ச்சி அடைகிறது. முதிர்ச்சி அடைகிறது. பக்குவமடைகிறது. பின் இறுதியில் அந்த ஆன்மா இறைவனை அடைகிறது. அதற்குப் பின் பிறப்பே இல்லை. எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வாழலாம்.

மரணத்திற்குப்  பின் வாழ்க்கை இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது என்றே நான் நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்  

ஆன்மிகத் தேடல்கள் 

Post a Comment

 
Top