வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் சில துணிச்சலான முடிவுகளை நீங்கள் எடுக்கத் தான் வேண்டும். எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்பவர்கள் சாதிக்கவே முடியாது என்பது தானே உண்மை? சிலர் மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் உண்மையில் பெரிய பெரிய காரியங்களை பண்ணுவதே இல்லை. அவர்கள் மிகச் சாதாரண வாழ்க்கையையே வாழ்வார்கள் என்பது நிஜம். நீங்கள் சாதிக்க விரும்பினால் துணிச்சலான சில முடிவுகளை எடுக்கத் தயங்காதீர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பவரா நீங்கள்? மேலே படியுங்கள்....



வாழ்க்கையே ஒரு ஆபத்தான பயணம் என்றே சொல்ல வேண்டும். எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று மாலை ஆரோக்கியமாக இருந்தவர் இன்று உயிரோடு இல்லை. போன  மாதம் பணக்காரனாக இருந்தவர் இன்று பாப்பராகி விடுவதைப் பார்க்கிறோம். நிலை இல்லாத வாழ்க்கை தான் இது.  ஆனால் அதில் தானே சுவாரசியம் இருக்கிறது? 

ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் நல்லது கெட்டது எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து எடுக்கும் துணிச்சலான முடிவுகளே பெரிய வெற்றிகளைத் தரும். சில சமயங்களில் நம் கணக்குத்  தப்பி போகும் என்பது உண்மை தான். அதனால் சில நஷ்டங்களையும்  தோல்விகளையும் துன்பங்களையும் நாம் சந்திக்கலாம். ஆனால் நாம் பயந்து விடாமல் தொடந்து போராடி வெற்றிகளை கைப்பற்ற வேண்டும்.

பெரிய பெரிய தொழிலதிபர்கள்  எல்லாம் துணிச்சலான முடிவுகளை (Calculated Risk) எடுத்தவர்களே. சீர்தூக்கிப் பார்த்து சில துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது உங்களை வெற்றிகரமான மனிதராக ஆக்கி விடும்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top