இன்று பலர் திருமணத்திற்கு மணமகனுக்கும் மணமகளுக்கும் 8 முதல் 10 பொருத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மேலும் செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மணமகனையே
திருமணம் செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர். அதே போல் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆணையே பொருத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இது சரியான முறையா? திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?  மேலே படியுங்கள்....



10 பொருத்தம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான அணுகு முறை ஆகும். நல்ல வரன் கள் அமையும் போது 5 பொருத்தம் தானே இருக்கிறது என்று பலர் இன்று தட்டிக் கழித்து விட்டு பின் சுமாரான வரனை முடிவு செய்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுகிறது. மேலும் பல திருமணங்கள் இதனால் தள்ளிப் போகின்றன. அதே போல் ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷம் உள்ளவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதும் தவறான கருத்து ஆகும்.



10 பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தம் என்பது மாங்கல்யப் பொருத்தம் ஆகும். அதை மட்டும் பார்த்தால் போதுமானது. நல்ல மணமகன் அல்லது நல்ல மணமகள் என்றால் மற்றப் பொருத்தங்களை அதிகம் பார்க்கத்தேவை இல்லை. உதாரணமாக, ஒரு பையன் நன்றாகப்  படித்திருக்கிறான், நல்ல வேலையில் இருக்கிறான், நல்ல ஒழுக்கமான பையன் என்று வைத்துக்  கொள்ளுங்கள். ஆனால் 5 பொருத்தம் தான் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 10 பொருத்தம் இல்லை என்று அந்த வரனை விடுவது புத்திசாலித்தனமா என்று நீங்களே சொல்லுங்கள்.

அதே போல் தான் செவ்வாய் தோஷமும் ராகு கேது தோஷங்களும். எல்லா ஜாதங்களிலும் இந்த தோஷங்கள் இருக்கத் தான் செய்யும். அவை எல்லாம் பெரிய தோஷம் இல்லை.  பெண் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் கேது இருந்தாலோ, அல்லது எட்டாம் வீட்டு அதிபதி கேதுவுடன் இணைந்து அதன் தசை திருமணமான சில வருடங்களில் வந்தாலோ அந்த ஜாதகத்தை விலக்கலாம்.

இருவருக்கும் ராகு தசை நடப்பில் இருந்தால் பொருத்த வேண்டாம். நீங்கள் பார்க்கும் வரனுக்கு வரப் போகும் தசைகள் தீமை விளைவிக்கும் தசைகளாக இருந்தால் அந்த வரனை விலக்கலாம். ஆயுளுக்குப் பங்கம் இருந்தால் விலக்கலாம்.

மற்றபடி பொருத்தங்கள் கம்மியாக இருக்கிறது என்றோ, ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் இருக்கிறது என்றோ நல்ல வரன்களை விலக்குவது புத்திசாலித்தனமாகாது என்பதே என் கருத்து. வீணாக நல்ல வாய்ப்புகளை தவற  விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

கிரகங்களைப் பற்றிய சில சுவையான ஜோதிட செய்திகள் 


சுக்கிரன் ஆண்களையும் பெண்களையும் படுத்தும் பாடு 

Post a Comment

 
Top