நீங்கள் ஈ.எஸ்.பி. மற்றும் டெலிபதி சக்திகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அது உண்மையா அல்லது வெறும் கற்பனைக் கதையா என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். ஈ.எஸ்.பி. என்றால் என்ன?  டெலிபதி என்றால் என்ன? ஈ.எஸ்.பி., டெலிபதி சக்திகள் இருப்பது உண்மையா? மேலே படியுங்கள்.....



ஈ.எஸ்.பி. ( ESP)என்பது ஆங்கிலத்தில்  Extra Sensory Perception  என்பதன் சுருக்கம் ஆகும். தமிழில் 'கூடுதல் புலனறிவு' அல்லது 'கூடுதல் உணர்வு கருத்து' என்று அழைக்கலாம். வருங்காலத்தில் நடக்க இருக்கும் ஒரு சம்பவத்தை முதலிலேயே சொல்லும் சக்திக்கு ஈ.எஸ்.பி என்று பெயர். இந்த ஆற்றல் லட்சத்தில் அல்லது கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்கும் அந்த சக்தி  ஒரு அளவுக்கு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஒரு பாட்டை நினைத்திருப்பீர்கள். அடுத்த வினாடியே அந்த பாடல் வானொலியிலோ அல்லது தொலைகாட்சியிலோ நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதே போல் அந்த பாட்டை உங்களுக்கு  நெருங்கிய ஒரு சொந்தக்காரரோ அல்லது நண்பரோ அல்லது வாழ்க்கைத்துணையோ அடுத்த வினாடி முணுமுப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

நீங்கள் வெகு நாட்கள் கழித்து ஒருவரை நினைக்க, அடுத்த நிமிடமே அவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வருவதை பார்த்திருப்பீர்கள். இவை எல்லாம் நம்மிடமும் அந்த ஈ.எஸ்.பி. சக்தி இருப்பதையே உணர்த்துகிறது. ஆனால் நாம் அந்த சக்தியை வளர்த்துக்கொள்வதில்லை என்பது தான் நிஜம். ஒரு சிலருக்கு இந்த சக்தி நம்மை விட சற்றே அதிகம் இருக்க கூடும். வெகு சிலருக்கே இந்த சக்தி அதிக அளவில் பலிக்கும்படி இருக்கும்.

டெலிபதி என்பது மற்றவரின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து சொல்லுவது ஆகும். ஒரு சிலர் இங்கிருந்துகொண்டே அமெரிக்காவிலுள்ள ஒருவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்  என்பதை துல்லியமாக சொல்லிவிடுவார். இஸ்ரேலைச் சேர்ந்த யூரி கெல்லெர்  என்பவர் அத்தகைய சக்தி கொண்டிருக்கிறார். அவர் ஒரு ஸ்பூனை தன்  கண் பார்வையால் பார்த்தே வளைத்து விடுவார். நம் நாட்டில் கூட ஒரு சிலர் அடுத்த நிமிடம் வரும் பேருந்தின் எண்ணை சரியாக சொல்லிவிடுவதைப் பார்க்கிறோம்.

ஆக, ஈ.எஸ்.பி. மற்றும் டெலிபதி போன்ற சக்திகள் ஒரு சிலருக்கு பிறப்பிலேயே இருக்கின்றன என்பது நிஜம். நம்மைப் போன்ற சாதாரண  மனிதருக்கும் அந்த சக்தி குறைந்த அளவில் இருக்கிறது. நாம் அந்த சக்தியை வளர்த்துக் கொள்வதில்லை. 

தினமும் தியானம் செய்பவர்களுக்கு இந்த சக்தி எளிதில் கைகூடும் என்பதும் உண்மை தான். இவற்றை எல்லாம் வெறும் கட்டுக் கதை என்றும் சிலர் சொல்லுகிறார்கள். உண்மை அறிய நாம் இந்த விஷயத்தை ஆராய்ச்சி  செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்!

அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டுமா?

ஆன்மிகத் தேடல்கள் 


Post a Comment

 
Top