மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் நோயற்று நூறு ஆண்டுகள் வாழவே ஆசைப்படுவார்கள். ஆனால் எத்தனைப் பேர் அந்த அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்? மனிதன் குறைந்தது 120 ஆண்டுகள் வாழுமாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மனிதன் இயற்கையை விட்டு அகன்று சென்றதால் அவனது ஆயுள் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் மனிதன் பலவிதமான நோய்களுக்கு இன்று ஆளாகிவிட்டான் என்பது நிஜம். நோயற்ற பெரு வாழ்வு வாழ சில எளிய குறிப்புகள் இதோ உங்களுக்காக.


உணவுப்  பழக்கம்: நமது உணவுப்  பழக்கம் நமது ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மிகவும் பாதிக்கிறது எனலாம். அதாவது சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் நோயற்ற பெரு வாழ்வு வாழலாம். நமது ஆயுளும் குறிப்பிடத் தக்கவாறு நீளும். உணவே மருந்தாகும் என்பார்கள். சரியான உணவை சரியான முறைப்படி உண்டால் நோயில்லாமல் நீண்ட நாட்கள் வாழலாம்.

நல்ல உணவு: நாம் நல்ல உணவை உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம். இயற்கையான பழங்களும் காய்கறிகளும் மிகச் சிறந்த உணவாகும். மாமிச உணவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தேன், இஞ்சி, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், நெல்லிக்காய், மாதுளம்பழம், பேரிச்சம்பழம், தேங்காய், எலுமிச்சம்பழம்   இவற்றை தினசரி உண்ணலாம். துரித உணவு கூடவே கூடாது. பிட்சா, பர்கர் போன்றவை உடலுக்குத்  தீங்கு விளைவிக்கக் கூடியவை. பொறித்த உணவு மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவை தவிர்க்கவும்.

உணவு உண்ணும் முறை: உணவை நன்றாக மென்றே சாப்பிட வேண்டும். உமிழ் நீர் உணவு செரிப்பதற்கு பெரிதும் உதவும்.சாப்பாட்டை இரசித்து உண்ண  வேண்டும். சாப்பிடும் போது தொலைக் காட்சி பார்க்கக்  கூடாது. பசித்த பின் தான் உணவு உண்ண  வேண்டும். உணவு உண்ணும்போது தண்ணீர் அருந்தக்  கூடாது. சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரமும்  சாப்பிட்ட பின் அரை மணி நேரமும் தண்ணீர் அருந்தக் கூடாது. தாகம் எடுக்கும்  போது மட்டும் தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

உடற்பயிற்சி: தினசரி  உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதை விட சிறந்தது யோகாவும், தியானமும் தான்.

மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் தோல்விகள் சாதரணப்பா என்று கவுண்டமணி சொல்லுவது போல் வாழ்க் கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே உற்சாகத்துடன் இருங்கள். முடிந்த வரை சிரியுங்கள். கடந்த கால துன்பங்களை மறந்து விட்டு நிகழ் காலத்தில் வாழுங்கள். எதிர்காலத்தைப்  பற்றிய பதட்டத்தை விட்டு விட்டு நிகழ் காலத்தில் வாழுங்கள்.

நோயின்றி வாழ்க நூறாண்டு காலம்!

வாழ்க வளமுடன்!

பால் குடிப்பது நல்லதா?

நாம் தேவைக்கதிகமாக மருந்துகள் பயன்படுத்துகிறோமா?






Post a Comment

 
Top