வெற்றி பெற கடினமாக உழைக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.  வெற்றி பெற்றவர் எல்லோருமே கடினமாக உழைத்தவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கடினமாக உழைத்தவரெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். கடினமாக உழைத்தும் ஏன் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிய வில்லை? மேலே படியுங்கள்......


கடினமாக உழைக்கும் சிலர் வாழ்க்கையில் பல தோல்விகளையும் போராட்டங்களையும்  சந்திப்பதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம்? முக்கியக்  காரணம் அவர்கள் புத்திசாலித்தனமாக செயல் படாதது தான் என்றே சொல்ல வேண்டும். பிறப்பால் ஏழையாய் பிறந்தவர்கள் சரியான வழி காட்டுதல் இல்லாததாலும், புத்திசாலித்தனம் போதிய அளவு இல்லாததாலும், சரியான வாய்ப்புகள் கிடைக்காததாலும்  கடினமாக உழைத்தும் பெரிய வெற்றிகளை பெற முடியாமல் தவிக்கின்றார்கள். அவர்களுக்குப்  போதிய உலக அறிவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் அல்லது வேலை அவர்களுக்குப்  பொருந்தாததாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு அனுபவம் இல்லாத துறையை அவர்கள் தேர்ந்தெடுத்ததால் தோல்வி எற்பட்டிருக்கலாம். அவர்களை யாராவது தவறாக வழி காட்டியிருக்கலாம். அவர்களைச்  
சுற்றியுள்ள அவர்களுக்கு வேண்டாதவர்கள் அவர்கள் முன்னேற்றத்தைத்  தடை செய்திருக்கலாம்.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு காரணமும் இருக்க சாத்தியம் உண்டு. அது தான் அவர்கள் துரதிர்ஷ்ட,ம் என்பது. ஆம். வாழ்க்கையில் சிலருக்கு அதிர்ஷ்டம் பெரிய வெற்றிகளையும், சிலருக்கு துரதிர்ஷ்டம் பெரிய தோல்விகளையும் அளிக்கின்றது என்பதை மறுக்க இயலாது.

ஆம். புத்திசாலித்தனம் இல்லாத கடின உழைப்பும், அதிர்ஷ்டம் இல்லாத கடின உழைப்பும் சில சமயங்களில் உங்கள் வெற்றியை தடுத்து விடும்.

ஆனால் அதற்காக மனம் தளரக் கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் புத்திசாலித்தனம் ஒரு நாள் வந்து விடும். அதிர்ஷ்டமும் தானாகவே ஒரு நாள் வந்து சேர்ந்தாக வேண்டுமென்பது தான் விதி.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top