தாழ்வு மனப்பான்மை என்பது ஏதோ உங்களுக்கு மட்டும் தான் இருப்பதாக நினைக்காதீர்கள். எல்லோருமே ஏதோ ஒரு சூழ் நிலையில் தாழ்வு மனப்பான்மையில் தவித்துக் கவலையுற்றவர்கள் தான். அப்படி என்றாவது ஒரு நாள் தாழ்வு மனப்பான்மையில் துன்பப்படுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அனுதினமும் நீங்கள் தாழ்வு மனப்பான்மையால்  வாடிக்
கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது நிச்சயம் தவறு தான். தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுவது எப்படி? மேலே படியுங்கள்........


முதலில் தாழ்வு மனப்பான்மை எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். நீங்கள் உங்களை உங்களின் திறமைகளை மற்றவரோடும்  மற்றவரின் திறமைகளோடும்  ஒப்பிடும்போது தான் தாழ்வு மனப்பான்மை பிறக்கிறது. நீங்கள் ஏன் உங்களை மற்றவரோடு ஒப்பிடவேண்டும்? நீங்கள் இந்த உலகில்  தனித்தன்மை வாய்ந்தவராகத்தான் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆம், உங்களைப்போல் ஒருவர் இவ்வுலகில் இல்லவே இல்லை. உங்களின் கட்டை விரலின் ரேகைகள் உலகில் வேறு யாருக்கும் ஒத்துப் போகாது.

நீங்கள் உங்கள் உடலை மற்றவரின் உடலோடோ அல்லது நிறத்தோடோ ஒப்பிடுவது மாபெரும் தவறாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை மற்றும் திறமைகள் உண்டு. அப்படித்தான் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான். உங்கள் தனித் திறமைகளை கண்டு கொண்டு அவற்றை ஆராதியுங்கள். அந்த திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிலத் திறமைகள் உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். அல்லது நீங்கள் பார்ப்பதற்கு பிரமாதமான அழகு உடையவராக இல்லாமலிருக்கலாம். இதற்கெல்லாம் கவலைப் பட ஒன்றுமே இல்லை என்பது தான் நிஜம். உங்களின் திறமைகள் சில விஷயங்களில் குறைவாக இருந்தாலும் அதற்காக அவற்றை வெளிப்படுத்த நீங்கள் தயங்கவே கூடாது. நீங்கள் சுமாராக பாடக் கூடியவராக இருந்தாலும் தைரியமாக சபையினில் பாட வேண்டும். 

மற்றவரோடு அன்பாக பழகுங்கள். மற்றவரின் திறமைகளை தாராளமாக பாராட்டுங்கள். அதே சமயம் உங்களின் உடல் தோற்றத்திலும், திறமைகளிலும் பெருமைக்கொள்ளுங்கள். தினமும் யோகா மற்றும் தியானம் செய்தால் உங்களின் மனம் உறுதியாகும். தன்னம்பிக்கை பிறக்கும். தேவையற்ற தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஒழியும்.

வாழ்க வளமுடன்!

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்குத்  தேவையா? 

மன அழுத்தத்திலிருந்து வெளி வருவது எப்படி?


Post a Comment

 
Top