வாழ்க்கையில் வெற்றி அடையவே எல்லோரும் விரும்புகின்றனர். ஒரு சிலர் துடிக்கின்றனர் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே வெற்றிக்  கனியைப் பறிக்கின்றனர். பலர் தோல்வியைத்தான் தழுவுகின்றனர். 


ஒரு சிலரால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது? வெற்றி சூத்திரம் தான் என்ன?

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று விஷயங்கள் தேவை என்று நினைக்கிறேன். 

1. கடின உழைப்பு: கடின உழைப்புக்கு மாற்று ஒன்றுமே கிடையாது என சொல்லலாம். வாழ்க்கயில் வெற்றி பெற்றவர் எல்லோரும் கடின உழைப்பாளிகளே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். பெரும்பாலான கடின உழைப்பாளிகள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பது நிஜம். 

2. புத்திசாலித்தனம்: புத்திசாலித்தனம்  வெற்றியை எளிதாக்கும். புத்திசாலித்தனமும், கடின உழைப்பும் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த இரண்டின் சேர்க்கை தோற்பது என்பது மிகவும் அரிதாகும்.

3. அதிர்ஷ்டம்: கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்துடன் அதிர்ஷ்டம் சேரும்போது மிகப்பெரிய வெற்றி உறுதியாகும்.

இந்த மூன்றும் சேரும் போது வெற்றி 100 சதவிகிதம் உறுதியாகிறது.

வெற்றி என்னும் முக்கோணத்திற்கு கடின உழைப்பு, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் என்னும் மூன்று விஷயங்கள் தேவை.

வெற்றி சூத்திரம்:

கடின உழைப்பு+புத்திசாலித்தனம்+அதிர்ஷ்டம்= வெற்றி 

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

               உங்கள் மனதின் அற்புத சக்திகள் 


Post a Comment

 
Top