இன்று பிறந்த குழந்தைக்கே மன  அழுத்தம்

இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெரும்பாலும் கத்தியைப் பார்த்து விட்டுத்தானே 

குழந்தை இன்று உலகத்தையேப் பார்க்கிறது. 

மிஞ்சி மிஞ்சி போனால் 3 வயது வரை தான்

குழந்தை நிம்மதியாக இருக்கிறது. பிறகு

பள்ளிக்கூடம் என்று போக ஆரம்பித்த உடனே 

மன அழுத்தம் வந்து விடுகிறது. பிறகு 

சாகும்போது தான் அந்த மன அழுத்தம் நம்மை 

விட்டு நீங்குகிறது.




மன அழுத்தம் ஏன் வருகிறது?


நாம் இன்று நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எதிலும் வேகம், எதிலும் பரபரப்பு. ஏகப்பட்ட போட்டி எல்லா இடங்களிலும். மன  அழுத்தம்  வராமல் என்ன செய்யும்? .இன்று உலகத்தில் நாம் அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு, பணத்திற்கு அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டோம். அன்பில்லாத இடத்தில் மன அழுத்தம் வராமிலிருக்குமா?


சரி, இந்த மன அழுத்தத்திலிருந்து விடு படுவது எப்படி?


* எல்லோரிடமும் அன்பாக இருக்கப்  பழகுங்கள்.

* பிடித்த வேலையை செய்யுங்கள்.

* கடினமாக உழையுங்கள். 

* வரவுக்குத் தக்க செலவு செய்து பழகுங்கள்.

* குறித்த நேரத்திற்கு முன்பாகவே வேலையை முடித்து பழகுங்கள்.

* ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டுமானால் கொஞ்சம் முன்னதாகவே கிளம்பி விடுங்கள்.

* எதிரிகளை சம்பாதிக்காதீர்கள்.

* எதிரிகளை மன்னித்து விடுங்கள்.

* பிடித்த பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிடுங்கள்.

* இனிமையான இசையைக்  கேளுங்கள்.

* உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இன்ப உறவு கொள்ளுங்கள்.

* குழந்தைகளுடன் விளையாடுங்கள்.

* தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளைப் பாருங்கள்.

* உற்சாகமானவர்களோடு நேரத்தை செலவு செய்யுங்கள்.

* எல்லாவற்றிகும் மேலாக யோகா மற்றும் தியானம் தினமும் செய்யுங்கள்.

** மேற்கூறியவற்றை செய்து மன அழுத்தத்திற்கு 'டாட்டாசொல்லுங்கள். வாழ்க வளமுடன்!  



Post a Comment

 
Top