நேர்மை என்பது டைனோசர் போல் உலகில் முற்றிலும் அழிந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. காமராஜர்களும், காந்திகளும் வாழ்ந்த நாடா இது என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.


இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் லஞ்ச, லாவண்யம் தலை விரித்தாடுகிறது. ஊழல் அங்கெங்கெனாதபடி எங்கும் கொஞ்சம் கூட கூச்சம் இன்றி நடமாடிக் கொண்டிருக்கிறது. ஆடை இல்லாத ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி என்பது போல்  இன்று  நேர்மை இல்லாதவர்களே எங்கும்  இருக்கும்  போது  நேர்மையாய் இருப்பது என்பது கேலிக்கூத்தாகி விட்டது. நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்கின்ற சந்தேகம் நமக்கு வரத்தான் செய்கிறது.

நேர்மையாக  இனி  வாழவே முடியாதா என்கின்ற ஆதங்கமும் கேள்வியும் நம்முள் எழுகின்றது. இன்றும் சில அதிகாரிகள் நேர்மையாக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எங்கெங்கோ பந்தாடப்பட்டாலும் அசராமல் துணிவுடனும், கொள்கைப் பிடிப்போடும் வாழுகின்றனர். அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் அடிப்போம்.

எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. பிரான்சு நாட்டில்  பிரபுக்களின்  கொடுங்கோல் ஆட்சி நடந்த பொது புரட்சி வெடித்தது. நம் நாட்டிலும் லஞ்சம்,நேர்மையின்மை இவற்றிற்கு ஒரு முடிவு கண்டிப்பாக ஏற்படும். அது வரை நாம் பொறுமையாக இந்த அசிங்கங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

வாழ்க இந்தியா! வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top