நாம் எத்தனையோ விஷயங்களை வாழ்க்கையில் அடைய விரும்புகிறோம். ஆனால் அவைகளை எப்படி அடைவது என்பது புரியாமல் குழம்பி, பின்  நம்பிக்கை இழந்து நம் முயற்சிகளை கை விடுகிறோம்.


வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை எல்லாம் அடைவது எப்படி?

மனிதன் நான்கு விஷயங்களால் ஆனவன்.அவை உடல், மனம், அறிவு மற்றும் உயிர் என்னும் ஆன்மா ஆகும். நாம் உடலுக்கு அடிமையாகி, உடலின் கட்டளைப் படி நடக்க ஆரம்பித்தால் அதிகமாக சாப்பிடுதல், சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், காமவயப்படுதல் என்று நம் வாழ்க்கையை லௌகிய விஷயங்களில் ஈடுபட்டு வீணடித்து விடுகிறோம். தற்காலிக சிற்றின்பத்திற்காக நேரத்தையும், பணத்தையும், மற்றும் ஆரோக்கியத்தையும் இழந்து இறுதியில் துன்பத்தை அடைகிறோம்.

அறிவு நமக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை புரிய வைக்கிறது.

மனம் அபரிதமான சக்தி உடையது. மனதை நம் வசப்படுத்தினால் நல்ல விஷயங்களை செய்து வெற்றியும் சந்தோஷமும் அடைவோம்.

நம் உடல், அறிவு, மனம், ஆன்மா இவை நான்கும் சரியாக ஒன்றோடொன்று இணைந்து செயலாற்றும் போது நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் நிச்சயம் நடக்கும்.

தியானம் தினசரி செய்தால், நம் உடல், அறிவு, மனம், ஆன்மா இவை நான்கும் சரியாக ஒன்றோடொன்று இணைந்து செயலாற்றும் சக்தியைப் பெறுவோம். அதற்குப் பின் நாம் நினைத்தக்  காரியங்கள் அத்தனையும் தப்பாமல் நடக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

வாழ்வது என்பது ஒரு அற்புத கலை. அந்த வாழும் கலைப் பற்றி நம் புரிதல் தெளிவாகி விட்டால், பிறகு வாழ்வது என்பது எளிதாகி விடும்.
தியானம் மூலம் தன்னை உணருங்கள். தன்னுள் இருக்கும் இறைவனை உணருங்கள். இறை சக்தியுடன் தொடர்பு ஏற்பட்டபின் நீங்கள் நல்லவற்றையே விரும்புவீர்கள். நீங்கள் விரும்பியவை அனைத்தையும் அடைந்தே தீருவீர்கள் என்று சொல்லி முடிக்கறேன். வாழ்க வளமுடன்!


             பணப் பிரச்சினைக்குத்  தீர்வு 

அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

Post a Comment

 
Top