பல கோடி இந்திய மக்கள் சராசரி ஆயுளுடனே வாழ்ந்து மடிகின்றனர். சுமார் 60 வயதிலிருந்து எழுபதுக்குள் நிறைய பேர் இறக்கின்றனர். ஒரு சிலர் அற்ப ஆயுளில் இறப்பதும் உண்டு.  ஆனால் ஒரு சிலர் மட்டும் 85 வயது தாண்டியும்  வாழ்கின்றனர். அவர்கள் நீண்ட ஆயுள் உடையவர் என்று சொல்லலாம்.



ஒரு சிலர் மட்டும் நீண்ட ஆயுளுடன் வாழும் ரகசியம் தான் என்ன? மேலே படியுங்கள்........

ஒருவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் வாழும் சூழல், நமது வாழும் முறை,  நம் மன நிலை மற்றும் நமது பெற்றோர்கள், அதற்கு முந்தைய சந்ததியினரின் ஆயுள் இவற்றைப் பொறுத்தே நமது ஆயுளும் அமையும்.

பொதுவாக நமது அப்பா, அம்மா, தாத்தா பாட்டிகள் அதிக வருடங்கள் வாழ்ந்திருந்தால் நாமும் அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு அதிகம் என்று உறுதியாக சொல்லலாம். அதிக ஆண்டுகள் வாழ்ந்தவரின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களின் பெற்றோர்கள் நீண்ட ஆயுளை அனுபவித்தவர்கள்  என்பது புலப்படும்.

நமது வாழும் முறை நம் ஆயுளை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாகிறது. முக்கியமாக நமது சாப்பிடும் பழக்கங்கள் நமது ஆயுளைக்  கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். 

ஜப்பானியரின் சராசரி ஆயுள் 80 வருடங்கள் ஆகும். காரணம் அவர்கள் மீன் போன்ற கடல் உணவுகளையும், கிரீன் டீ போன்றவற்றையும் அதிகம் உட்கொள்ளுகின்றனர். அவர்கள் வாழும் சூழ்நிலைகளும்  அவர்கள் ஆயுளைக் கூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. பொதுவாகவே பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்பவர்கள் அதிக வருடங்கள் வாழ்கின்றனர். மாமிச உணவு, வறுத்த உணவு, போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் ஆயுளுக்கும் பங்கம் ஏற்படுகிறது.சிக

ப்பு ஒயின், டீ, இயற்கை உணவு, காய்கறிகள், பழங்கள், தேன் போன்றவை உங்கள் ஆயுளைக் கூட்டும் சக்தி வாய்ந்தவை. 

யோகா, தியானம் செய்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வார்கள். அதிகம் கவலைக் கொள்ளாதவர்கள், பதட்டம் இல்லாதவர்கள்  நீண்ட ஆயுளைப் பெறுவார்கள். 

உடலையும், மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவை சரியான அளவில்  சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். உடல் உழைப்பு நல்லது. உடல் உழைப்பு இல்லாதவர்கள் உடற்பயிற்சி செய்யலாம். வயதானவர்கள் வேகமாக நடக்கலாம் தினமும்.

புகைப் பிடிக்காதீர்கள். மது அதிகமாய் அருந்தாதீர்கள். அனாவசியமாக கவலையோ, பதட்டமோ படாதீர்கள். பயத்தைத்  தவிருங்கள். வாழ்க்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத சில விஷயங்கள் நம் வாழ்வைப் புரட்டிப் போடலாம். பிரச்சினைகளையும், தோல்விகளையும் மனதார ஒப்புக் கொள்ளுங்கள்.அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள தவறாதீர்கள்.

உங்கள் வேலையை சந்தோஷமாக அனுபவித்து செய்யுங்கள். பிறர் என்ன சொல்வாரோ என்று நினைத்து நினைத்து பிறருக்காக வாழ்ந்தால் நம் ஆயுள் குறுகும்.

இறைவன் மேல் முழுமையான நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை எளிதாகிப்போகும். நிம்மதியான, சந்தோஷமான நீண்ட ஆயுள் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்!

நீங்கள் விரும்பியதை அடைவது எப்படி?

புற்று நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

Post a Comment

  1. nicely written. message conveyd in an easy manner. good day.

    ReplyDelete

 
Top