'உலகம் ஒரு நாடக மேடை. நாம் எல்லோரும் நடிகர்கள்', என்று ஷேக்ஸ்பியர் அற்புதமாகச்  சொன்னார். அது எவ்வளவு உண்மை? நாம் எவ்வளவு போலித்தனமாக வாழ்கிறோம் என்று சற்று எண்ணிப் பார்த்தால் நாம் வெட்கித் தலைக் குனிய வேண்டி வரும்.



கணவன் மனைவியிடையே கூட போலித்தனம் இல்லாமலிருக்க முடிவதில்லை இப்பொழுதெல்லாம். எப்படியெல்லாம் கௌரவம் பார்த்து வாழ்கிறோம் நாம். ஓட்டலுக்குச் சென்றால் தன்னிடம் பணம் இல்லையென்றாலும் கௌரவத்திற்காக பில் கொடுப்பவர் எத்தனைப் பேர் நம் திரு நாட்டில் இருக்கின்றனர்? போலிக் கௌரவம் எத்தனை நாட்கள்  கை குடுக்கும்? ஒரு நாள் உண்மை பல்லிளிக்காதா?

போலிக் கௌரவத்திற்காக கடனில் வீடு வாங்குபவர் எத்தனை பேர் உள்ளனர்? கடனில் கார் வாங்குபவர், ஏ.சி. வாங்குபவர், விலை உயர்ந்த துணிமணிகள் வாங்குபவர் எத்தனை எத்தனை?(கடனை அடைக்கும் சக்தி உள்ளவர்கள் வாங்குவது நல்ல முடிவு தான், சக்தி இல்லாதவர்கள் பின் பெரிய பணப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார்கள்)

அட, சாப்பிடுவதில் கூட எத்தனை போலித்தனம் வந்து விட்டது? பிட்சா பிடிக்க வில்லை என்று சொன்னால் நாம் நாகரிகம் தெரியாதவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுவோம் என்பதற்காக பிட்சாவை ஆர்டர் செய்பவர் எத்தனை பேர்? கிரிக்கெட் பிடிக்க வில்லைஎன்றாலும் கௌரவத்திற்காக தொலைக்காட்சியில் மாட்ச் பார்ப்பவர் எத்தனை பேர்?

சொந்தக்காரர் ஒருவர் தடபுடலாக செலவு செய்து மகள் கல்யாணத்தை நடத்திவிட்டால், நம் வீட்டு பெண்மணியும் நம் பிள்ளைக்கு ஆடம்பரமாக செலவு  செய்யவே விரும்புவார். கடனை வாங்கிப் பின் ஏன் கடன்காரனுக்குப் பயந்து மறைந்து வாழ வேண்டும்?

உங்களுக்கு இன்று என்ன வருமானமோ அதற்குத் தக்க செலவு செய்வது தான் சரியான வாழ்தலாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வெற்று ஜம்பம், பந்தா எல்லாம் எதற்கு?

நான் மற்றவர் என்னை மதிக்க வேண்டும் என்று ஆடம்பரமாக செலவு செய்தால் அந்த மரியாதை 
தற்காலிகரமானதாகத் தான் இருக்கும். ஒரு நாள் நம் சாயம் வெளுக்கும் போது பெரிய அவ மரியாதை தான் ஏற்படும்.

பணம் உள்ளவரைப் பார்க்கும் போது போலித்தனமான மரியாதைக் கொடுப்பது, போலித்தனமாக ஒருவர் மீது அன்பு காட்டுவது, போலித்தனமாக மற்றவருக்காக வாழ்வது எல்லாமே தவறான விஷயங்கள் தான். 

கூடிய மட்டில் போலித்தனத்தைக்  கை விட்டு உண்மையான, வெளிப்படையான வாழ்க்கை வாழப் பழகுவோம். வாழ்க வளமுடன்! 

             பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

கிரகங்களைப் பற்றிய சுவையான செய்திகள் 

Post a Comment

 
Top