விதியை நம்புகிறவர்கள் ஏராளம். விதி வலியது, அதை யாராலும் மாற்ற முடியாது என்று அவர்கள் உறுதியாக நம்புவர். விதியின் போக்கிலேயே சென்று வாழ்வர் இவர்கள்.




விதி என்று ஒன்றும் இல்லை, நாம் தான் நம் விதியை ஏற்படுத்திக்கொள்கிறோம்  என்றும்  சிலர் கூறுவர்.

விதி என்று உண்மையில் உண்டா? அல்லது அது  சோம்பேறிகள் தங்கள் தோல்வியை மறைக்க உபயோகிக்கும் ஆயுதமா?

பொதுவாக பார்க்கும் போது நம் வாழ்க்கை நம் கையில் தான் இருப்பது போல் தெரிகிறது. ஆனாலும்  சில சமயங்களில் நமக்கு அப்பாற்பட்ட சக்தி நம் வாழ்வை அடியோடு திசை திருப்பி விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

பிறந்த குழந்தைகள் உயிர்  கொல்லி நோய்களுடன் துன்பப்படுவதைப் பார்க்கும் போது விதி இருப்பது புலனாகிறது. வீதியில் நடைபாதையில் கவனமாக சென்று கொண்டிருப்பவர் லாரியில் அடி பட்டு இறப்பதை பார்க்கும்போது விதியை நம்பாமல் எப்படி இருப்பது?

ஒரே நாளில் சிலர் கோடீஸ்வராவதையும் பார்க்கிறோம். ஒரே நாளில் கோடீஸ்ரவரர்கள்  தெருவுக்கு வருவைதையும் பார்க்கிறோம்.

சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் பல்லாயிரக்கணக்கானோர் இறப்பது விதியின் விளையாட்டாகத்தான் தோன்றுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விதி திடீர் மரணம், திடீர் பண வரவு, திடீர் பண இழப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கிறது.

விதியை மதியால் வெல்ல முடியுமா? அதை இன்னொரு வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.

                      மறு பிறவி உண்டா? 

       
                              விவாக ரத்து அதிகரிப்பது ஏன்? 

Post a Comment

 
Top