சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா மிகவும் செழிப்பான நாடாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆண்டார்கள். ஆனால் நாம் சுதந்திரம் அடைந்த போது நம் பொருளாதாரம் சொல்லும்படி இல்லை என்பது தான் உண்மை.



இன்றைய நிலைமை என்ன? நம் பொருளாதாரம் வீ ழ்ச்சியுற் று இருக்கின்றதா

நம் இந்தியப பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்து இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் சொல்லுவார்கள். ஆனால் விவசாயத்தை மேம்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

விவசாயிகளை அரசாங்கமோ அல்லது மற்றவர்களோ அதிகம் மதிப்பதில்லை என்று விவசாயிகள் சொல்லுகிறார்கள். அவர்கள் விளைவிக்கும் பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடிவதில்லை என்பது விவசாயிகளின் குறைபாடாகவே இருந்து வருகிறது. விவசாய நிலங்கள் பின் ஏன் வீட்டு மனைகளாக மாறாது? நிதி அமைச்சர்கள் விவசாயத்தை ஏன் கண்டு கொள்ளுவதில்லை என்பது  எனது சிற்றறிவுக்குப்  புரியவில்லை.

அடுத்து நம் பொருளாதாரம் சார்ந்து இருப்பது தொழில் துறையைத்தான். நம் நாட்டில் தொழில் முனைபவர்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை.மாறாக அவர்களுக்கு குறிப்பாக சிறு தொழில் முனைபவர்களுக்கு அரசாங்கமே அதிக தொல்லைகள் தருவதாக சொல்லுகிறார்கள். ஆக தொழில் துறையும் அவுட்.

அப்போ எப்படித்தான் நாம் ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்? தகவல் தொழில் நுட்பத்துறை என்னும் (IT Sector) தான் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.

அரசாங்கம் அவர்களையும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று சொல்லுவார்கள். அது உண்னமையோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் ஐ.டி  இல்லையேல் இந்தியா இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

வாழ்க ஐ.டி! வளர்க பாரதப்  பொருளாதாரம்!!



                                  இந்தியா ஏழை நாடா 




Post a Comment

 
Top