இப்பிரபஞ்சத்திலிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் எல்லோரும் நேசிக்கவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஒருவரை வெறுக்க ஐடியா கொடுப்பது சரியான அணுகுமுறை அல்ல என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் சிலர் அதீதமாய் நேசித்தவரை மறக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது மறக்க முடியாமல் தவிக்கின்றார்கள். அவர்களுக்கு  இந்த ஆலோசனை பயன் தர முடியும் என்று நான் உறுதியாக நம்புவதால் இதை எழுதுகிறேன்.




ஒருவரை மறக்க வேண்டிய சூழ் நிலை எப்போது ஏற்படுகிறது?

ஒருவரை நீங்கள் உயிருக்குயிராய் காதலித்து  பிறகு ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களை பிரிய நேர்ந்தால் .......

திருமணமாகி பல வருடங்கள் வாழ்ந்து பின் பிரியும் சூழ் நிலை வரும்போது .......

ஒருவரை நீங்கள் அபரிதமாய் காதலிக்க அவர்களோ உங்களை கொஞ்சமும் விரும்பாமல் இருந்தால் அல்லது அவர்கள் வேறு ஒருவரை காதலித்தால் .........

நீங்கள் மிகவும் நேசித்த அந்த நபரை மறக்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அன்று. அவர்களை நீங்கள் வெறுத்தால்  மட்டுமே அது  சாத்தியமாகும்.

நீங்கள் உயிருக்குயிராய் நேசித்தவரை வெறுப்பது எப்படி?

உங்களின் உண்மையான அன்பிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் நினைவை உங்கள் மனதில் இருந்து அகற்றுங்கள்.

ஒவ்வொருவரிடமும்  சில நல்ல விஷயங்களும், திறமைகளும் ஒரு புறம் இருந்தாலும், வேறொரு புறம் அவர்களுக்கு சில கெட்ட விஷயங்களும், குறைபாடுகளும் இருக்கத்தான் செய்யும்.  அவர்களின் குறைபாடுகளை அடிக்கடி நினைத்துப் பார்த்து அவர்கள் ஒன்றும் அதிசயப்பிறவி இல்லை என்பதையும், அவர்கள் ஒரு சராசரி ஆள் தான் என்பதையும் மனப்பூர்வமாக உணருங்கள்.

அவர்கள் உங்களை எப்படி எல்லாம் கஷ்டப்படுத்தினார்கள் என்பதையும், எப்படி எல்லாம் உங்களை அவர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதையும் அடிக்கடி நினைத்துப்  பாருங்கள்.

இந்த பரந்த உலகில் அவர்களை விட நல்ல மனிதர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள்.

உங்களுடன் வாழ அவர்களுக்குக்  கொடுப்பினை இல்லை என்று பூரணமாகவும் உறுதியாகவும் நம்புங்கள்.

இந்த  மனித வாழ்க்கை நீர்க்குமுழி போல் விரைவில் முடியக்கூடியது. இந்த குறுகிய வாழ்வில் அவர்களை  நினைத்து நினைத்து வேதனைப்பட்டு நரகத்தை அனுபவிக்காதீர்கள்.

பிரிந்தவரை வெறுத்து விடுங்கள். அப்பொழுது வாழ்க்கை எளிதாகி  விடும்.
நேசித்தவரை வெறுத்து நரக வாழ்விலிருந்து சிக்கிரம் விடுபட்டு சுக வாழ்வு வாழ ஆரம்பியுங்கள். மனித வாழ்க்கை என்பது  அரிதானது. அதை முழுமையாக மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.


வாழ்க வளமுடன்!

                 விவாகரத்து அதிகரிப்பது ஏன்?

                  கற்பழிப்பு அதிகரித்து வருகிறதா?


Post a Comment

 
Top