உலகமே எச். ஐ. வி பயத்திலிருந்து இன்னும் மீளாத சூழ்நிலையில் 'எபோலா' பயம் மக்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.





ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய இந்த கிருமி இன்று உலகத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் இதற்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான்.  'எபோலா' வந்து விட்டால் எமன் வந்த மாதிரி தான் என்கிறார்கள்.

'எபோலா' வின் அறிகுறிகள் தான் என்ன?

காய்ச்சல், உடம்பு வலி, வாந்தி, பேதி, உடலுக்குள்ளும், வெளியேயும்,  இரத்த கசிவு  போன்றவைதான்.

'எபோலா'  எப்படி பரவும்? மனித திரவங்கள் மூலமாகத்தான் பரவும். அதாவது, நோயாளியின் இரத்தம், எச்சில் , வியர்வை, சிறுநீர் போன்றவற்றுடன் நேரடியாக நம் உடல் தொடர்பு ஏற்பட்டால் தான் பரவ முடியும். 

'எபோலா' எந்த அளவுக்கு பயப்பட வேண்டிய நோய்?  மீடியாக்கள், சிறிய விஷயங்களையும் பெரிது படுத்தி அவர்கள் வியாபாரத்தைப்  பெருக்கி கொள்வார்கள். எச். ஐ. வி  விஷயத்தில் மீடியாக்களின் சேவை, நாரதர் கலகம் போல்  நன்மையாகத் தான் முடிந்ததது. பயத்தினால் மக்கள் ஒழுக்க சீலர்களாக மாறித்தான் போனார்கள்.

 'எபோலா'  உயிர்க்கொல்லி நோய் தான். இருந்தாலும் நாம் அச்சப்பட வேண்டியதில்லை.


வாழ்க வளமுடன்! 

            யோகாவின் பயன்கள் 

                             மறு பிறவி உண்டா?

Post a Comment

 
Top