வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் 'கொலை வெறி' இருக்க வேண்டும் என்பார்கள். விளையாட்டில் ஜெயிக்கவேண்டும் என்றாலும் கொலை வெறி அவசியம் தேவை என்பர்.




இன்றைய நவீன சுய முன்னேற்ற குருக்கள் வலியுறுத்துவதும் இந்த கொலை வெறியைத்தான். பெரிய தொழில் நிறுவனங்கள் 'கொலை வெறி' கொள்கைகளைத்தான் பின்பற்றி வருகின்றன.

'கொல்லும் வெறி' இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாதா? பண்டைய பாரத முனிவர்கள் கொலைவெறியை ஒருபோதும் சிபாரிசு செய்ததில்லை.

அப்படி என்றால் கொலை வெறி இல்லாமல் வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி?

உங்களின் அதீத மகிழ்ச்சி எதில் உள்ளது? உங்களது திறமை எது? உங்களின் கனவு  எது? உதாரணமாக பாட்டு பாடுவது தான் உங்கள் சந்தோசம் மற்றும் கனவு என்றால் அது சம்பந்தப்பட்ட படிப்பை படியுங்கள். அதே தொழிலை மேற்கொள்ளுங்கள். விருப்பத்தோடு வேலை செய்யுங்கள். பெரிய வெற்றிகள் உங்களை தேடி வரா விட்டாலும் தொடர்ந்து  விருப்பத்தோடு தொழிலை செய்யுங்கள். உங்களது முழுத்  திறமையையும் வெளிப்படுத்துங்கள். 

முழு கவனத்துடன் நீங்கள் செயல் பட்டால்  நீங்கள் வெற்றியைத்தேடி செல்ல வேண்டியதில்லை. வெற்றி உங்களைத்  துரத்தும். 

நீங்கள் முதலிடத்திற்கு வருவீர்கள் முதலிடம் பற்றி சிந்திக்காமல் வேலை செய்யும் போது.

வெற்றிக்குத்  தேவை கொலை வெறியா? முழுக் கவனத்துடன் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்வது வெற்றியைத் தருமா?

பதிலை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஒய்திஸ், கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி டோய்?


                    யோகாவின் பயன்கள் 

               பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?



Post a Comment

 
Top