மனித மனம் என்பது அற்புதமானது. விசித்திரமானது. புதிரானது. ஆனால் அது வியத்தகு சக்திகள் கொண்டது. மனித மனத்தின் சக்திதனை    அளவிடவே முடியாது. நாம் நம் மனதின்  சக்தியில் 1 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.





மனம் என்றால் என்ன? இதயத்தை மனம் என்று சிலர் நினைக்கின்றனர். மனம் என்பது இதயத்தைப் போல் ஒரு உறுப்பன்று. மூளையையும்  மனம் என்று சொல்ல முடியாது.

அப்படி என்றால் மனம் என்பது தான் என்ன?

மனம் என்பது எண்ணங்களின் ஓட்டமே. தொடர்ந்து  வரும் எண்ணங்களின் ஓட்டத்தையே நாம் மனம் என்கிறோம்.

மனித மனத்தினால் எத்தனையோ அரிதான  காரியங்களை எளிதில் முடிக்க முடியும். சொல்லப்போனால் மனித மனத்தால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமே இல்லை எனலாம். பண்டைய பாரத முனிவர்கள் வியத்தகுக்  காரியங்களை செய்தது எல்லாம் மனத்தின் ஒப்பற்ற ஆற்றலை வைத்துத்  தான்.

நீங்கள் உங்கள் மனதைக்  கொண்டு பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் பெற முடியுமா என்றால் நிச்சயம் முடியும் என்று உறுதியாகக்  கூறலாம்.

உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் நீங்கள் நினைத்ததை எல்லாம் எளிதில் சாதிக்கலாம். உங்கள் மனம் உறுதியாகவும், நம்பிக்கை உடையதாகவும் இருந்தால் இந்த உலகமே உங்கள் வசப்படும் என்பது நிஜம்.

சரி, சரி,மனதை உறுதிப்படுத்துவது எப்படி என்று நீங்கள் கேட்பது எனக்குப்  புரிகிறது. தியானம் தான் மனதை ஒரு நிலைப் படுத்தவும், உறுதிப்  படுத்தவும் உதவுகிறது.

மனம் என்பது ஒரு அறுவை சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் கத்தியைப் போன்றது. அந்தக் கத்தியினால் ஒரு உயிரைக் காக்கவும் முடியும். ஒரு உயிரை எடுக்கவும் முடியும் அது ஒரு கொலைகாரனின் கைகளில் இருந்தால்.

மனதைத் தூய்மையாக  வைத்துக் கொள்ளுங்கள்.உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளைக்  காணுங்கள்.

வாழ்க வளமுடன்!

            யோகாவின் பலன்கள்.

                        விதி வலியது தானா?

Post a Comment

 
Top