ஆன்மிகவாதிகள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் யார் ஆன்மிகவாதிகள் என்பதில் நிறைய மாற்றுக் கருத்துக்கள் நிச்சயம் இருக்கும்.


தாடி வைத்தவரெல்லாம் ஆன்மிகவாதிகள் என்று தங்களைத் தாமே கூறிக் கொள்ளுகிறார்கள். காவி கட்டியவர்களெல்லாம் ஆன்மிகவாதிகளாக உலா வருகிறார்கள்.

தாடி வைத்தவர், காவி கட்டியவர் எல்லாம் ஆன்மிகவாதிகளா?

இன்னும் ஒரு சிலர் கோவிலுக்கு அதிகமாக  செல்பவர்கள், பூஜை புனஸ்காரங்கள் செய்பவர்களெல்லாம் ஆன்மிகவாதிகள் என்று நினைக்கின்றனர்.

கோவிலுக்கோ, தேவாலயத்திற்கோ, மசூதிக்கோ செல்வதாலோ, பகவத் கீதை அல்லது பைபிள் அல்லது குரான் படிப்பதாலோ ஒருவர் ஆன்மிகவாதியாக முடியாது.

அப்படி என்றால் யார் ஆன்மிகவாதி?

கடவுளைக்  கோவில்களில் தேடுபவன் ஆன்மிகவாதி அல்ல. தன்னை உணர்பவன், தன்னுள் இருக்கும் இறைவனை உணர்பவன் தான் உண்மையான ஆன்மிகவாதி. இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகின்றவர் ஆன்மிகவாதி.

தன கடமைகளைப்   பலன்களை எதிர்பார்க்காமல் 
செவ்வனே செய்பவன் ஆன்மிகவாதி. வெற்றிகளையும், தோல்விகளையும் சமமாக பார்ப்பவன், இன்பங்களையும், துன்பங்களையும் சமமாக ஏற்பவன் உண்மையான ஆன்மிகவாதி.

இறைச்  சக்தியுடன் தொர்புக்  கொள்பவன் ஆன்மிகவாதி. அந்த தொடர்பினால் பேரின்பம் அனுபவிப்பவன் ஆன்மிகவாதி. பொருள்  சார்ந்த  உலகியல் இன்பங்களில், மற்ற சிற்றின்பங்களில் நாட்டம் இல்லாது,  இறைத் தொடர்பால் ஏற்படும் பேரின்பத்தில் திளைப்பவன் தான் ஆன்மிகவாதி.

போலிச் சாமியார்களின் ஆசிரமங்களில் ஆன்மிகத்தைத்  தேடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வோம். நம்மை உணர்வோம். நம்மில் இருக்கும் இறைவனை உணர்வோம். பேரின்பத்தைப் பெறுவோம். வாழ்க வளமுடன்!

                    விதி வலியதுதானா?



Post a Comment

 
Top